நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வரும் முன் எப்படி இருந்தார் தெரியுமா ? புகைப்படங்கள் இதோ...

நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வரும் முன் எப்படி இருந்தார் தெரியுமா ? புகைப்படங்கள் இதோ...

நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வரும் முன் எப்படி இருந்தார் தெரியுமா ? புகைப்படங்கள் இதோ...
X

2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 - ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி தனக்கு அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

சினிமாவில் நடிப்பதற்கு முன் கேரளா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் நயன்தாரா நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியை விட்டு விட்டு சினிமாவிற்கு வருவதற்கு முன் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.

விளம்பரப்படத்தில் நயன்தாராக்கு மேக்கப் செய்திருந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அணிலா ஜோசப் அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.அதில் இளம் பருவத்தில் தேவதைப் போல் மின்னும் நயந்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Newstm.in

Next Story
Share it