காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா?! ஆன்மீக சுவாரஸ்ய கதை!

நம்மில் பலர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி வழிபட்டு காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா என்பதை தற்போது ஒரு ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். நாம் அடிக்கடியோ அல்லது நம் மனம் சோர்வடையும் நல்லது மகிழ்ச்சி அடையும் நேரத்தில் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். அவ்வாறு

காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா?! ஆன்மீக சுவாரஸ்ய கதை!
X

நம்மில் பலர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி வழிபட்டு காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா என்பதை தற்போது ஒரு ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம்.
நாம் அடிக்கடியோ அல்லது நம் மனம் சோர்வடையும் நல்லது மகிழ்ச்சி அடையும் நேரத்தில் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். அவ்வாறு செல்லும்போது இறைவனை வணங்கிவிட்டு பெரும்பாலானோர் கோவில் உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்துவார்கள். ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும், இறைவனின் அருள் முழுமையான பக்திக்காக மட்டுமே கிடைக்கும். அப்படி முழுமையான பக்தியின் விளக்கத்தை தற்போது ஓர் ஆன்மிகக் கதை மூலம் பார்க்கலாம்.
நாரதரின் கலகம் நல்லதில் முடிவடையும் என்பார்கள். அதுபோல ஒரு கலகத்தை கிருஷ்ணன் வீட்டினுள் கிருஷ்ணனை வைத்தே நிகழ்த்தினார் நாரதர். பகவான் கிருஷ்ணனுக்கு ருக்மணி, சத்யபாமா என இரண்டு மனைவிகள். இதில் சத்யபாமா அரசு குலத்து பெண். தான் ஒரு அரசர் குலத்து பெண் என்பதால் அதற்கான கௌரவமும் கர்வமும் செல்வமும் அழகும் அதிகமாக இருக்கும். அவள் தன்னுடன் கிருஷ்ணரை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தாள்.


ஆனால் ருக்மணி மிகவும் பாசமானவள். பகவான் கிருஷ்ணனை நினைத்து பக்தி மயமாய் இருப்பவள். தன்னுடன் கிருஷ்ணன் இல்லை என்றாலும் உண்மையான அன்புடன் கிருஷ்ணன் நினைத்து கொண்டே இருக்கும் நல்ல உள்ளம் படைத்தவள்.
நாரதர் சத்யபாமாவிடம் சென்று தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக கூறினார். அந்த சந்தேகம் என்னவென்றால் கிருஷ்ணன் மீது அதிகம் பாசம் வைத்திருப்பது சத்யபாமா அல்லது ருக்மணியை என்று கேள்வியை கேட்டிருந்தார். மேலும், இந்த சந்தேகம் மக்களுக்கும் உள்ளது என தனது கலகத்தை ஆரம்பித்தார்.

காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா?! ஆன்மீக சுவாரஸ்ய கதை!
பின்னர் இதனை நிரூபிக்கும் வண்ணம் ஒரு நாடகத்தை நாரதரும் ருக்மணியும் ஆரம்பித்தனர். அதாவது கிருஷ்ணர் ஒரு தராசு தட்டில் வைக்கப்பட்டார். அவருக்கு நிகராக செல்வங்களையும், பொருளை வைத்து கிருஷ்ணரை தங்களுடன் வைத்து கொள்ளலாம். ஆனால், அப்படி வைக்க முடியாவிட்டால் கிருஷ்ணர் நாரதருக்கு சொந்தம் என தனது கலகத்தை தொடங்கினார்.
உடனே, ருக்மணி தனது செல்வங்கள் அனைத்தையும் தராசு தட்டில் கிருஷ்ணருக்கு நிகராக வைத்தாள். ஆனால், கிருஷ்ணருக்கு நிகரான தங்கம் வைரம் பொருள் எதுவுமே இல்லை. அதனால், தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள் ருக்மணி. இதற்கிடையில் நாரதர் கிருஷ்ணர் தனக்குத்தான் சொந்தம் என சொந்தம் கொண்டாட ஆரம்பித்தார்.


உடனே, பதறிப்போன ருக்மணி தனது அக்காவான சத்தியபாமாவை அழைத்தாள். சத்தியபாமா அங்கிருந்து வந்து தராசுத் தட்டில் இருந்த செல்வங்களை அகற்றிவிட்டு தான் மனதார வேண்டிக்கொண்டு ஒரு துளசி இலையை எடுத்து தராசு தட்டில் வைத்தாள். அந்தத் தராசு முள் இப்போது துளசி இலை இருக்கும் பக்கம் சாய்ந்து விட்டது. அதன் பின்னர் தான் தன் தவறை ருக்மணி உணர்ந்து கொண்டாள். உண்மையான அன்புக்கு நிகர் எந்த செல்வமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.
இறைவனை நாம் மனதார நினைத்து வேண்டினால் போதும். கண்டிப்பாக காணிக்கை செலுத்தினால் தான் இறைவன் நமக்கு அருள் தருவார் என்கிற எண்ணம் இருக்கவே கூடாது. உண்மையான பக்தியுடன் இறைவனை நினைத்து வேண்டினால் நாமக்கு வேண்டிய பலன் கிடைக்கும்.

newstm.in

Tags:
Next Story
Share it