உங்களுக்கு கொரோனா இருக்கா..? நீங்களே கண்டுபிடித்து கொள்வது எப்படி?

உங்களுக்கு கொரோனா இருக்கா..? நீங்களே கண்டுபிடித்து கொள்வது எப்படி?

உங்களுக்கு கொரோனா இருக்கா..? நீங்களே கண்டுபிடித்து கொள்வது எப்படி?
X

கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த உலகத்திலையும் பெரும் அழிவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், மனித குலத்திற்கு எதிரியாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வைரஸ் நம்மை தாக்கியுள்ளதா என பலர் அச்ச உணர்வுடனே சுற்றுகின்றனர். இந்த நோய் உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவித மருத்துவமனைக்கும் போகாமல் நாமே அறிந்து கொள்வது எப்படி.? நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை அறிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  

கொரோனா அறிகுறிகள்:
உங்களுக்கு இந்த நோய் தாக்கம் வந்துருச்சு அப்படின்னா இதை அறிந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களில் இருந்து அதிகபட்சம் 14 நாட்கள் ஆகலாம். இந்த அறிகுறியை தெரிந்து கொள்வதற்கு அவங்க அவங்களோட நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து. சில பேருக்கு அறிகுறியே இருக்காது. 

முக்கிய முதல் அறிகுறி காய்ச்சல் :

எல்லாக் காய்ச்சலுக்கும் கொரோனா வைரஸ் தான் என்று கூற முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், வீட்டில் இருக்கும் தெர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்யலாம். அப்படி செக் பண்ணும் பொழுது 100 பாரன்ஹீட்டுக்கு அது சாதாரண காய்ச்சல் என்று கணக்கிட முடியாது, உதாரணத்திற்கு 96- 97 , 100 இருந்தால் அது சாதாரண மனித உடம்பில் உள்ள சூடு. ஒருவேளை 100 பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் அது சாதாரண காய்ச்சலாக கருதப்படுகிறது. அப்படியே ஒவ்வொரு மனிதருக்கும் இந்த உடல் சூடு மாறுபடும். அதை காய்ச்சல் என்றும் சொல்ல முடியாது.

உடல் சூடு என்றும் சொல்ல முடியாது. ஆனால் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் இந்த நோய் தொற்றுக்கான முதல் அறிகுறி என்று உறுதி படுத்தலாம். இந்த காய்ச்சல் சோதனையை மதிய நேரத்திற்கும் மாலை நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சோதித்தால் உடம்போடு சரியான நிலையில் இருக்கும். அந்த நேரங்களில் சரியான வழிகாட்டுதலும் கிடைக்கும். இரண்டு மூன்று நாளைக்கு மேல் காய்ச்சல் இருந்தால் முதல் அறிகுறி நீங்களே முடிவு செய்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீங்க உங்கள பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். 

இரண்டாவது முக்கிய அறிகுறி வறட்டு இருமல் :

நாம் சாதாரணமாக இருமும் பொழுது இந்த நோய்க்கான அறிகுறி கிடையாது. உங்களுக்கு காய்ச்சல், இருமலை இருந்தாலும் அதற்கான அறிகுறி அப்படின்னு உறுதிப்படுத்த முடியாது. இந்த நோய்க்கான அறிகுறியை சாதாரண இருமல் போல இருக்காது. சாதாரண இருமல் தொண்டை குழாயிலிருந்து வரும். இந்த மாதிரியான வறட்டுஇருமலை இதுவரைக்கும் நீங்கள் வாழ்க்கையில் அனுபவிக்காத இருமலாக இருக்கும். இந்த இருமல் உங்களுடைய இதயத்தில் இருந்து வருவதை நீங்கள் உணரலாம். அப்படி இருந்தால் நிச்சயம் இந்த நோய்க்கான முக்கிய அறிகுறியாக உணரலாம். 

மூன்றாவது முக்கிய அறிகுறி மூச்சு திணறல் :

மூன்றாவது முக்கிய அறிகுறிகள் இருந்துச்சுன்னா நிச்சயம் உங்களுக்கு இந்த நோய் தொற்று இருக்கலாம் என்று முடிவு செய்துக்கொள்ளலாம். காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது மூச்சு உள்ளே இழுக்கப்பட்டு இதயம் அடைக்கும் அப்பொழுது உயிர் போகும் ஆபத்து ஏற்படும். சாதாரண மூச்சு  திணறலுக்கும் வைரஸ் மூச்சி திணறலுக்கும் இதுவே வித்தியாசம். அது நிச்சயம் இந்த நோய்க்கான அறிகுறி.

இந்த மூன்று அறிகுறிகளும் வெறும் சாதாரண அறிகுறியாக இருந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. இதில் இரண்டு அறிகுறிகள் வந்துவிட்டாலே நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியமானது.

அதுமட்டுமில்லாமல் மருத்துவர்கள் உங்களுக்கு இந்த தொற்று நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னர் உங்களை நீங்கள் தனிமைப் படுத்துவது அதை விட முக்கியம்.  

Next Story
Share it