1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க !! ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் ப்ரப்தீப் கவுர் டுவிட் !!

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க !! ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் ப்ரப்தீப் கவுர் டுவிட் !!


இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 1989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க !! ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் ப்ரப்தீப் கவுர் டுவிட் !!

ஆனால் கொரோனா  பாதிப்பு மற்றும் அறிகுறிகளுடன் உள்ள பலர் பரிசோதனை செய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சென்றால், இன்று போய் நாளை வா என்று அனுப்பிவிடும் நிலை தான் உள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ரூ.4 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பலரும் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே பரிசோதனைக்காக வருகின்றனர். பல நாட்கள் காத்திருந்து தான் பரிசோதனை நடத்த வேண்டிய நிலை  தற்போது உருவாகியுள்ளது.

இதனால் தான் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொரோனாவில் இருந்து தப்பிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ?

என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் துணை இயக்குநர் ப்ரப்தீப் கவுர் டுவிட்டரில் பதிவிட்டு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குறிப்பிட்ட எதையும் எடுக்க வேண்டுமா என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆரோக்கியமான வாழ்க்கை  முறை சிறந்த வழியாகும் என்று பதிவிட்டு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் , தினசரி புரதச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகளை கட்டாயம் உண்ண வேண்டும்.

யோகா, நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை வாரத்திற்கு 150 நிமிடங்கள் மேற்கொள்க வேண்டும். நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுக்கக்கூடாது. வைட்டமின் சி மற்றும் டி ஆகிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதிய அளவு தூக்கம் அவசியம். புகைப்பிடித்தலை கைவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like