1. Home
  2. தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிக்க கூடாது !! மத்திய அரசு திடீர் அறிவிப்பு

கிருமி நாசினி தெளிக்க கூடாது !! மத்திய அரசு திடீர் அறிவிப்பு


கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த கட்டிடங்கள், தெருக்கள் ஆகியவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், தமிழகம் உள்பட சில இடங்களில் கிருமி நாசினி சுரங்கம் என்ற பெயரில்  பாதை அமைக்கப்பட்டிருந்தது.  

முக்கிய அங்காடிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதைகளில் செல்லும் மக்கள் மீது கிருமி நாசினி இயந்திரம் மூலமாகத் தெளிக்கப்பட்டது. இந்த நிலையில், மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தனிநபர்கள் , குழுக்கள் மீது எந்த சூழலிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரசாயனம் கலந்த கிருமி நாசினியைத் தெளிப்பதால் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும்  என  சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in

Trending News

Latest News

You May Like