விஜய் மாநாடு குறித்து நக்கலடித்த திமுக ராஜீவ் காந்தி..!
விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு முதல் முறையாக லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிலையில் மாநாட்டில் பேசிய விஜய் தன்னுடைய எதிரிகள் மதவாத பிளவு சக்திகள் மற்றும் ஊழல் கபடதாரிகள் என தெளிவுப்படுத்தினார். மேலும் திமுகவை சரமாரியாக விமர்சித்தார். பெரியார், அண்ணா, பெயரை சொல்லி மக்களை சுரண்டும் சுயநலமிக்க குடும்ப ஊழல் கபடதாரிகள் என கடுமையாக சாடினார்.
மேலும் திராவிட மாடல் அரசு என்று கூறி மக்களை ஏமாற்றும் மக்கள் விரோத அரசு என்றும் ஆளும் திமுக அரசை போட்டுத் தாக்கினார். விஜய்யின் பேச்சைக் கேட்ட தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஓரிரு முறை திமுகவை கண்டித்து டிவீட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்த விஜய் இன்று திமுகவை நேரடியாக தாக்கிப் பேசினார்.
இந்நிலையில் விஜய்யின் ஆவேச பேச்சை நடிப்பு என விமர்சித்துள்ளார் திமுக நிர்வாகியான ராஜிவ் காந்தி. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!! Good flim.. 100 நாள் திரையரங்கிளும்!! OTT யில் கொஞ்சநாளும் ஓடும்! வாழ்த்துகள் நடிகர் விஜய் !! என குறிப்பிட்டுள்ளார்.
உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) October 27, 2024
Good flim 👏👏
100 நாள் திரையரங்கிளும்!!
OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’
வாழ்த்துகள் @actorvijay !!