1. Home
  2. தமிழ்நாடு

நடந்துகொண்டிருப்பது திமுகவின் ஊழல் மறைப்பு கூட்டம் – தமிழிசை விமர்சனம்!

1

பாஜக மூத்த தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக முதலவருக்கு கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளதாகவும், தமிழகத்தை காப்பாற்ற போவது தாமரைக்கொடி தான் என்றும் கூறினார்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,  இந்த அரசு எல்லா விதத்திலும் தோல்விடயுடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் அமிஷா தொகுதி மறு வரையறையினால் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது  என தெரிவித்துள்ளதாகவும்,  தமிழக முதல்வர் தோல்வியை மறைப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும் கூறினார். தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறுவதாகவும் தமிழிசை கூறினார்.

காவிரி, மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரத்திற்கு இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Trending News

Latest News

You May Like