தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் காலில் இவ்வளவு காயங்களா !! வைரலாகும் வீடியோ

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் காலில் இவ்வளவு காயங்களா !! வைரலாகும் வீடியோ

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் காலில் இவ்வளவு காயங்களா !! வைரலாகும் வீடியோ
X

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். சிலர் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு வீடியோக்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். முடி திருத்தும் கடைகள் எதுவுமே திறக்கவில்லை. இதனால் வீடுகளில் ஒருவருக்கு ஒருவர் முடி திருத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலதா முடி திருத்தி, ஷேவ் செய்வது, நகம் வெட்டுவது மற்றும் டை அடித்துவிடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவை விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

இதில் கால்களில் க்ரீம் தடவும் போது, அவரது காலில் உள்ள காயத்தின் தழும்புகளுக்கு , "இது எல்லாமே படப்பிடிப்பில் அடிபட்டது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது" என்று பேசியுள்ளார். மேலும் , மனைவி ஒவ்வொன்றாகச் செய்துவிடும்போது விஜயகாந்த் அதைச் சிரித்துக் கொண்டே ரசித்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு அவரது ரசிகர்கள் , தே.மு.தி.கவினர் , இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Newstm.in

Next Story
Share it