1. Home
  2. தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய்க்கு திமுக அவைத்தலைவர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி..!

1

தவெக முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது.  தவெக தலைவர் விஜய் இம்மாநாட்டில் தனது அரசியல் கன்னிப்பேச்சினை பதிவு செய்தார்.

பெரியார் எங்கள் கொள்கைத்தலைவர். ஆனால், கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் தவெகவிற்கு உடன்பாடு கிடையாது.  அவரை அடுத்து எங்களின் கொள்கைத்தலைவர் காமராஜர்.  அவரை எங்களின் வழிகாட்டியாக ஏற்கிறோம் என்றார்.  அம்பேத்கரையும் எங்கள் கொள்கைத்தலைவராக ஏற்கிறோம் என்று பேசினார் விஜய்.

அவர் தனது பேச்சில் பாஜகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.  பாஜக கொள்கை எதிரி என்றும்,  திமுக அரசியல் எதிரி என்றும் சொன்ன விஜய்,  பிளவுவாத அரசியல் செய்பவர்கள்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை எதிரி.  மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கே செல்லாது என்று எச்சரித்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு திமுக அவைத்தலைவர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

’’யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவைத்தான் எதிர்ப்பார்கள்.  காய்த்த மரம்தான் கல்லடி படும்.  திமுக என்பது ஒரு ஆலமரம்.  விமர்சனங்களை எதிர்கொள்ளும். தக்க பதிலடி கொடுப்போம்’’ என்றும் மேலும், ’’யார் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.  திமுகவினர் ஒரே குடும்பம்.  நம் குடும்பம் ஒன்றாக செயல்பட்டால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.  எவன் வந்தாலும் போனாலும் நமக்கொன்றும் இல்லை. நம்மை எதிர்ப்பவர்க்கு நாம்தானே போட்டி தவிர, நமக்கு யாரும் போட்டி அல்ல’’ என்று திமுவினர்’’ என்று திமுகவினருக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்வில் தொண்டர்களிடையே உரையாற்றினார். 

Trending News

Latest News

You May Like