பாஜகவுக்கு கை கொடுக்காத வெற்றி வேல் யாத்திரை… தட்டித்தூக்கிய திமுக!!

 | 

பாஜக முன்னெடுத்த வெற்றி வேல் யாத்திரை அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதியை கூட பெற்றுத் தரவில்லை. அறுபடைவீடுகளை உள்ளடக்கிய 5 தொகுதிகளில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.

வடஇந்தியாவை போல மதத்தின் பெயரில் தமிழகத்தில் வாக்குகளை கவரலாம் என்பதே தேர்தலுக்கு முன்பு பாஜகவின் திட்டமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளை நோக்கி பாஜகவினர் யாத்திரை நடத்தினர்.

வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்தை முன்னெடுத்த பாஜக தலைவர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களை வலம் வந்தனர். இது தங்களுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத்தரும் என பாஜகவினர் நம்பினர்.

ஆனால் தேர்தல் முடிவில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. அறுபடை வீடு அமைந்துள்ள 6 தொகுதிகளில் பாஜக ஒன்றில்கூட போட்டியிடவில்லை. இந்தத் தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட்டது. அதிலும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், திருத்தணி, பழனி, கும்பகோணம் (சுவாமி மலை), திருச்செந்தூர், மதுரை கிழக்கு (பழமுதிர்சோலை) ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

இதனால் முருகனை முன்னிலைப்படுத்தி பாஜக மேற்கொண்ட அரசியல் தமிழகத்தில் எடுபடவில்லை என தெரியவந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP