தேர்தலுக்கான பணிகளை துவக்கியது தி.மு.க..!
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வில் 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் தொகுதி பார்வையாளர்களை தி.மு.க. தலைமை நியமித்துள்ளது. பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவும், மேற்பார்வையிடுவதற்காகவும் இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
.png)