தி.மு.க. – வி.சி.க. இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா?திருமா பரபரப்பு பேட்டி!
தி.மு.க.வின் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. இந்த நிலையில், மது ஒழிப்பு மாநாடு விவகாரம், ஆதவ் அர்ஜூனன் கருத்து என அடுத்தடுத்து தி.மு.க. – வி.சி.க. இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், இந்த மோதல் கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த திருமாவளவன் இதற்குப் பதிலளித்தார்.
“ கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்தச் சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான ஒரு சின்ன வீடியோ ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலம் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதத்திற்கு இடம் அளித்துள்ளது. அதனால், தி.மு.க. – வி.சி.க. இடையே எந்தச் சிக்கலும் எழாது. எழுவதற்கும் வாய்ப்பு இல்லை.” என்றார்.
அவரிடம். ஆ.ராசா பற்றி ஆதவ் அர்ஜூனன் பேசிய கருத்துகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் சொன்ன ஆதவ் அர்ஜூனன், கட்சியில் உள்ள முன்னணி தோழர்களுடன் கலந்தாலோசித்து உட்கட்சி விவகாரங்கை, முன்னணி பொறுப்பாளர்கள் என உயர்நிலை குழு கொண்ட தோழர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியிருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி இதுதொடர்பான முடிவை எடுப்போம்.”
இவ்வாறு அவர் கூறினார்.