மீன் தொட்டிக்குள் யோகாசனம்..! சாதித்த 9வயது சிறுமி!

மீன் தொட்டிக்குள் யோகாசனம் செய்து நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார் 9 வயது சிறுமி
 | 

மீன் தொட்டிக்குள் யோகாசனம்..! சாதித்த 9வயது சிறுமி!

மீன் தொட்டிக்குள் யோகாசனம் செய்து நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார் 9 வயது சிறுமி 

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பார்வதி தம்பதியின் மகள் முஜிதா (9).  இவர், செவல்பட்டியில் உள்ள தாமு மெமோரியல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 4- ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 வருடத்திற்கும் மேலாக யோகாசனத்தில் பயிற்சி பெற்று வரும் முஜிதா தேசிய மற்றும் மாநில அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

அதன் ஒரு முயற்சியாக பள்ளி வளாகத்தில் நடந்த நிழ்வில் முஜிதா ஒரு அடி அகலமும் 21 இன்ச் நீளமுடைய சிறிய மீன் தொட்டிக்குள் அமர்ந்து கண்டபேருண்ட ஆசனம் என்ற ஆசனத்தை செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை 'நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு  2012-ல் வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம் இதுபோன்ற யோகா செய்ததே சாதனையாகவே இருந்தது. அந்தச் சாதனையை முஜிதா தற்போது முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP