சேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தினம் கொண்டாட்டம்

சேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 | 

சேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தினம் கொண்டாட்டம்

சேலம் நகரில் அமைந்துள்ள சோனா கல்லூரியில் உலக புத்தக தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா சபையின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு இதனை ஏற்பாடு செய்து, வாசிப்பு, வெளியீடு, பதிப்புரிமை, ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஓர் நிகழ்வாக இதனை செய்து வருகிறது. 

இதனை சிறப்பிக்கும் வகையில் சேலம் நகரில் அமைந்துள்ள சோனா கல்லூரியின் துணை தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமையில் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் உலக புத்தக தின விழா கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கல்லூரி நூலகத்தில் விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொருளாதார வல்லுநர்கள், மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் போன்றவர்களால் எழுதப்பட்ட நூல்கள் குறித்த கண்காட்சியை கல்லூரியின் துணை தலைவர் துவக்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து பேசிய துணைத்தலைவர் ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம். எனவே மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், புத்தகமும் பேராசிரியர்களும் இரு கண்கள் எனவும் ஒரு முழுமையான பொறியாளரை உருவாக்கிட உறுதுணையாக அமைந்திட புத்தகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன என்றும் தெரிவித்தார். 

சேலம் சோனா கல்லூரியில் நூலகத்தை அதிகம் பயன்படுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP