பச்சிளம் குழந்தைக்கு ஊசி போட்டபோது ஊசி முறிந்த விவகராம்: சுகாதாரத்துறை நோட்டீஸ்

மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி முறிந்த விவகாரத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியரிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

பச்சிளம் குழந்தைக்கு ஊசி போட்டபோது ஊசி முறிந்த விவகராம்: சுகாதாரத்துறை நோட்டீஸ்

மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி முறிந்த விவகாரத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியரிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரம் பகுதியினை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மலர்விழி கடந்த 21ம் தேதி மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவமனையில் பிரசவ வார்டில் கடந்த மாதம் 31ம் தேதி பச்சிளம் குழந்தைக்கு கை மற்றும் தொடை பகுதியில் தடுப்பூசி ஊசி போடப்பட்டுள்ளது. செவிலியர் தடுப்பூசி போட்டபோது, ஊசியின் ஒரு பகுதி முறிந்து குழந்தையின் தொடை பகுதிக்குள்ளே நின்றுள்ளது. இதனை கவனிக்காத செவிலியர்கள், மலர்விழி மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பினர்.

குழந்தையின் தொடை பகுதியில் ஊசி சிக்கியிருந்ததால் அந்த பகுதி வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை குளிப்பாட்டும் போது ஊசி தொடையில் சிக்கி இருப்பதை கண்ட பெற்றோர், பின்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஊசியை அகற்றியதோடு மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தனர். மேலும், ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியே வர நேற்று மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், சம்பவம் நிகழ்ந்த போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்த மூன்று பணி மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியருக்கு மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவர் மூலம் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், ஊசி முறிந்தது எவ்வாறு நடந்தது?, அப்போது அதனை பரிசோதிக்க தவறியது யார்? இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் யார்? என பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளதாகவும், விரைந்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP