யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் வேதனை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்த யூரியா இன்று தேவைக்கு வழங்காமல் ஆதார் அட்டைக்கு வழங்குவதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 | 

யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் வேதனை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்த யூரியா இன்று தேவைக்கு வழங்காமல் ஆதார் அட்டைக்கு வழங்குவதால்  விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் பரவலாக யூரியாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஆனால் யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்ததால் சம்பா மற்றும் தாளடி பயிர் உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை பயிர்களை பயிரிட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். நல்ல மழைக்கு பிறகு நெல் பயிர்களை பாதுகாக்க யூரியா, பொட்டாஷ் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட நுண்ணூட்ட உரங்கள் தெளித்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால் மிகவும் அத்யாவசியமான யூரியாவிற்கு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பருவ மழை தொடங்கிய பிறகு யூரியாவை தெளிக்க முடியாது. ஆனால் கடந்த ஐந்து தினங்களாக அரசு வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விவசாயிகள் நடையாய் நடந்தும் யூரியா கிடைக்கவில்லை.

அப்படியே கிடைக்கும் ஒரு சில சங்கத்தில் விவசாயிகள் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்தாலும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து விட்டு ஒரு மூட்டை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிவதாகவும், விவசாயிகள் கூறுகின்றனர்.  கடும் தட்டுபாடு நிலவிவரும் நிலையில் அடுத்த பருவத்திற்கு தேவையான அளவு யூரியா கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருப்பது, பாபநாசம், கபிஸ்தலம், கூனஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP