திருச்சி: பால் வாங்க மறுப்பு - பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

திருச்சி மணப்பாறையில், பால் கூட்டுறவு சங்கத்தினர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை வாங்க மறுத்ததால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பாலை வைத்து தான் தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.  மேலும், இப்பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் பலர் உற்பத்தியாகும் பாலை மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தான் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மணப்பாறையை அடுத்த குதிரைகுத்திப்பட்டியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து இன்று பால் வாங்குவதற்காக யாரும் வரவில்லை. இதனால் வேதனை அடைந்த பால் உற்பத்தியாளர்கள் பாலை எடுத்துக் கொண்டு மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு வந்து ஏன் பாலை கொள்முதல் செய்யவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி: பால் வாங்க மறுப்பு - பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

பாலின் தரம் குறைவாக இருப்பதாக பால்உற்பத்தியாளர்கள் சங்க அதிகாரிகள் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டது. இதையடுத்து உற்பத்தியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP