மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சோகம்!

சேலத்தில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 | 

சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள சேலம் பாலி கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில் தர்மபுரி மாவட்டம்  லலிகம் பகுதியை சேர்ந்த இளையராஜா, இவரது மனைவி வெங்கட் அம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் பிரசவத்திற்காக சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள சேலம் பாலி கிளினிக் மருத்துவமனையில் நேற்று காலை 9 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார் .

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சோகம்!

மருத்துவர்கள் உறவினர்களிடம் எந்த ஒரு அறிவிப்பும் அனுமதி பெறாமல் கர்ப்பிணி பெண் வெங்கட் அம்மாளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் மருத்துவர்களின் அலட்சியம் போக்கின் காரணமாக வெங்கட்டம்மாள் உயிரிழந்தார். மருத்துவர்களின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையில் அமர்ந்து நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சோகம்!

தவறான சிகிச்சை வழங்கிய இந்த மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர். உறவினர்களின் இந்த முற்றுகை போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முற்றுகை போராட்டம் 4 ரோடு பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP