தவறை தட்டி கேட்ட ரயில்வே காவலரை ஊரை விட்டு விரட்டிய ரயில்வே துறை

ரயில் பயணியை தகாத வார்த்தையால் பேசிய டிக்கெட் பரிசோதகரை தட்டிக்கேட்ட தலைமை காவலருக்கு பணியிடமாற்றத்தை பரிசாக வழங்கியுள்ளது ரயில்வேதுறை.
 | 

தவறை தட்டி கேட்ட ரயில்வே காவலரை ஊரை விட்டு விரட்டிய ரயில்வே துறை

ரயில் பயணியை தகாத வார்த்தையால் பேசிய டிக்கெட் பரிசோதகரை தட்டிக்கேட்ட தலைமை காவலருக்கு பணியிடமாற்றத்தை பரிசாக வழங்கியுள்ளது ரயில்வேதுறை. 

கடந்த ஜீலை 22ம் தேதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தம் கோவை வந்துள்ளார். பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக  அன்று மதியமே தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை சந்திப்பிலிருந்து சேலம் செல்ல ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.

அப்போது ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த பத்மகுமார் மாரியம்மாளிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்கு மாரியம்மாள் டிக்கேட் அவரது கணவரிடம் உள்ளதாகவும், அவர் முன்னே உள்ள இரயில் பெட்டியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தியதோடு, தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. 

தவறை தட்டி கேட்ட ரயில்வே காவலரை ஊரை விட்டு விரட்டிய ரயில்வே துறை

இதைக் கண்ட பணியில் இருந்த ஆர் பி எப் தலைமை காவலர் வீரமுத்து பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. இது தவறான செயல் என அறிவுறுத்தியுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த பத்மகுமார் எனக்கு அறிவுரை சொல்கிறாயா என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இரயில்வே காவலருக்கு மிரட்டலும் விடுத்தார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. 

இந்நிலையில், பெண் பயணி என்று பாராமல் தகாத வார்த்தைகளால் பேசிய டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்காத ரயில்வே துறை மறைமுகமாக தவறை தட்டிக்கேட்ட தலைமை காவலரை மதுரைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.

இவர் பணியில் இருந்தபோது, ரயில் பயணி தொலைத்த 25 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து உள்ளார். மேலும், ரயில் நிலையத்தில் கீழே கிடந்த 12,500 ரூபாய் ,1500 ரூபாய் விலை உயர்ந்த 9 செல்போன்கள் என சுமார் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் மதிப்புடைய பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து நற்பெயர் பெற்று உள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP