தபால் துறை தேர்வு கடினமாக இருந்தது: தேர்வர்கள்

தமிழ் மொழியில் இல்லாத தபால் துறை தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

தபால் துறை தேர்வு கடினமாக இருந்தது: தேர்வர்கள்

தமிழ் மொழியில் இல்லாத தபால் துறை தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். 

கிராம தபால் ஊழியர்களுக்கான பதவி உயர்வு தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றது. திருச்சி மண்டலத்திற்கான தேர்வு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்வை 310 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. 

தேர்வுக்கான கேள்விதாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் இருந்ததால்  தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் மொழியில் தேர்வுக்கு தயார் ஆகிய நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  கேள்விகள் தமிழில் இருக்காது என்கிற அறிவிப்பால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதுவே தேர்வை சிறப்பாக எழுத முடியாததற்கு காரணம் என்றும் கூறியுள்ளனர். 

இது போன்ற நடவடிக்கை வட மாநிலத்தவரை தமிழ் நாட்டில் உள்ள தபால் துறையில் புகுத்தும் முயற்சியாகவே உள்ளது என்றும் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் தேர்வு எழுதியவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP