தமிழை அழித்த இயக்கங்கள்தான் திராவிட இயக்கங்கள்: தமிழருவி மணியன்

திரவிட இயக்கங்கள் தமிழால் வளர்ந்த இயக்கங்களே தவிர தமிழை வளர்த்த இயக்கங்கள் இல்லை என்றும் தமிழை அழித்த இயக்கங்கள் என்றும் எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
 | 

தமிழை அழித்த இயக்கங்கள்தான் திராவிட இயக்கங்கள்: தமிழருவி மணியன்

திரவிட இயக்கங்கள் தமிழால் வளர்ந்த இயக்கங்களே தவிர தமிழை வளர்த்த இயக்கங்கள் இல்லை என்றும் தமிழை அழித்த இயக்கங்கள் என்றும் எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

திருச்சியில் துக்ளக் பொன்விழா சிறப்புக் கூட்டம் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழருவி மணியன், வேளுக்குடி கிருஷ்ணன், ரங்கராஜ் பாண்டே  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், "தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது என்பது உண்மைதான். என் மூச்சு முடிவதற்குள் திராவிட கட்சிகள் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். திராவிட இயக்கங்கள் தமிழால் வளர்ந்த இயக்கங்களே தவிர தமிழை வளர்த்த இயக்கங்கள் இல்லை. தமிழை அழித்த இயக்கங்கள் தான் திராவிட இயக்கங்கள்.

திராவிட இயக்கங்கள் நச்சு இலக்கியத்தை தான் விதைத்தது. எந்த ஒரு ஆற்றல் இல்லாதவனும் எடப்பாடியின் இடத்தை நிரப்பி விடலாம், ஆனால் சோவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. இன்றைய தினம் தமிழகத்தில் அரசியலமைப்பை நிர்ணயிக்கக்கூடியது சாதி, மதம் மற்றும் பணம், இதற்கு விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தல் உதராணம். திமுக சாதி, மதத்தை நம்புகிறது. அதிமுக கோடி, கோடியாக கொட்டி வைத்திருக்கும் பணத்தை நம்புகிறது.

பாஜக வளரும் வேண்டும் என்றால் தன்னுடைய தார்மீக சக்தியை கொண்டு வளர வேண்டும். மற்றவர் முதுகில் ஏறி நின்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் உங்களுக்கு எதுக்கு தனிக்கட்சி. எடப்பாடியின் ஆட்சி கலெக்சன், கரப்க்ஷன், கமிஷன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை, இதனை தொடக்கி வைத்ததே திமுக தான். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் வரை எடப்பாடி சுகமாக ஆட்சி அமைப்பார், எடப்பாடி ஆட்சி தொடர்வதே திமுகவினால் தான்.

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அமைச்சரும் ஊழல் செய்யவில்லை என்று சத்தியம் செய்ய முடியுமா? இவர்கள் அத்தனை பேரும் குடுமியும் டெல்லியில் இருக்கிறது. பணநாயகம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து இருக்கிறது, ஒரு பக்கம் சாதி மற்றும் மதம் மற்றும் பணம் விளையாடியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இவர்களை பதவியில் வைத்திருந்தால் ஒருவருக்கு 4000 கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஸ்டாலின் 2000 கொடுப்பார், இவர்கள் ஆட்சியை கலைத்து விடுங்கள்... இதற்கு 10 அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினால் போதும். 100 கோடி வரை கிடைக்கும் எண்ணுவதற்கு காலம் போதாது.

அதன்பிறகு ஆளுநர் ஆட்சி வரும், ஆளுநர் ஆட்சி வந்தால் அது உங்கள் ஆட்சி தான். இந்த ஆட்சியை உடனடியாக கலையுங்கள், ஆளுநர் ஆட்சியை கொண்டு வாருங்கள் 6 மாதம் வரை நீங்கள் ஆட்சி செய்யுங்கள், பஞ்சபூதத்தை மாசுபடுத்துவதை அழித்து ஒழித்து தமிழ் சமூகத்துக்கு நல்ல ஒரு விடுதலையை கொடுங்கள்.. அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால் தமிழகத்தில் பாஜக தானாக வளர்ந்துவிடும். அதிமுகவும், திமுகவும் வரும் தேர்தலில் பணத்தை கொடுக்காவிட்டால் ஜனநாயகத்தை நம்பியிருக்கும் ஒரு கட்சி எளிதாக வெல்லும். 

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க விட்டிருக்க வேண்டும், ஆறு மாதத்தில் அவர்கள் தானாகவே ஆட்சியிலிருந்து அவர்கள் அகலுவார்கள். பட்னாவிஸ் ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்திற்கு நடந்திருக்கும் சோதனை. காங்கிரசுக்கும், உங்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது" என கூறினார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP