சிலை உடைப்பு விவகாரம்: ஒருவர் கைது

நாமக்கல் அருகே முத்துகாப்பட்டி பெரியசாமி கோயிலில் சாமி சிலைகளை உடைத்த வழக்கில் கொல்லிமலை பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

சிலை உடைப்பு விவகாரம்: ஒருவர் கைது

நாமக்கல் அருகே முத்துகாப் பட்டி பெரியசாமி கோயி லில் சாமி சிலைகளை உடைத்த வழக்கில் கொல்லிமலை பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டி பெரியசாமி கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு  நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் கருவறையில் இருந்த விளக்கு கூண்டு, வளாகத்தில் இருந்த கருப்பணார், முனியப்பன் சிலைகளை அடித்து உடைத்தனர். மேலும், பூசாரி ரகுவின் வீட்டு கதவை அடித்து உடைத்தனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தப்பியோடிய இருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலறிந்த சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்ஐ கெங்காதரன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், சிலைகளை உடைத்த மர்ம நபர்களில் ஒருவரான கொல்லிமலை பரமசிவம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மே லு ம் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP