சேலம் ஆத்தூர் அம்பாயிரம் அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ஆரகளூர் கிராமம் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ளது ஸ்ரீ அம்பாயிரம் அம்மன் திருக்கோவில். இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு இன்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 | 

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பொதுமக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக பெருவிழாவை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேளதாளம் அதிரடியான வான வேடிக்கைகளுடன் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தீயணைப்புத் துறை சார்பாக புனிதநீரை அனைத்து மக்கள் மீதும் படும்படி தீயணைப்பு வாகனம் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

பல்வேறு மக்கள் குழுக்களாக பிரிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி விழாவைச் சிறப்பித்தனர். இவ்வளவு பெரிய கும்பாபிஷேக விழாவை சிறப்புடனும் கண்ணியத்துடனும் நடத்திக் காட்டிய ஆரகலூர் மற்றும் பெரியேரி கிராம மக்களை சுற்று வட்டாரப் பகுதி கிராம மக்கள் மனதார வாழ்த்திவிட்டு சுவாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றுச் சென்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP