திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்!

திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையன் சென்னை பெரம்பலூரில் காவல்துறையினர் சோதனையில் சிக்கினான்
 | 

திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்!

திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையன் சென்னை பெரம்பலூரில் காவல்துறையினர் சோதனையில் சிக்கினான். 

திருச்சி தனியார் வங்கி ஒன்றில் கடந்த 20 ஆம் தேதி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் வங்கியில் செக் கொடுத்து ரூ.16 லட்சம் பணம் பெற்றுள்ளனர். அப்போது, திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஒரு நபர் அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றார். 

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து சென்னை பெரம்பலூர் தனியார் விடுதியில் போலீசார்  பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டீபன் என்பவரின் உடமைகளை சோதனையிட்டபோது, ரூ.15.70 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து போலீசார் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்துள்ளார். 

சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், அவர் திருச்சி வங்கியில் கொள்ளையடித்த நபர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிம் இருந்த ரூ.15.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP