சேலம் மாநகரை குளிர்வித்த மழை! 

சேலத்தில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 | 

சேலம் மாநகரை குளிர்வித்த மழை! 

கோடை காலம் முடிவடைந்தாலும் கூட சேலத்தில் வெயில் தாக்கம் மட்டும் குறையவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை வேளையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை என 49 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும், சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

காலை முதலே வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், இரு தினங்களாக மாலை வேளையில் மழை பெய்ததினால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கனமழை காரணமாக மாநகரின் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் சிரமப்பட்டனர். அதோடு கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இருந்தபோதிலும் மழை மக்களை சந்தோஷம் அடைய வைத்துள்ளது என்பதே உண்மை!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP