நெல்லையில் அதிமுக - அமமுகவினரிடையே மோதல்

நெல்லை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
 | 

நெல்லையில் அதிமுக - அமமுகவினரிடையே மோதல்

நெல்லை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அழகு முத்துக்கோன் திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிக்க சென்றுள்ளனர். அப்போது அமமுக கட்சியினரும் அங்கு மாலை அணிவிக்க நின்றனர். 

அப்போது, மாலை அணிவிப்பதில் இரு கட்சிகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அடிதடியாக மாறியது. இதில் 2 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP