மார்டின் நிறுவன ஊழியரின் உடல் இன்று மறுபரிசோதனை!

உயர்நீதிமன்ற உத்தரவின் படி மார்டின் நிறுவன ஊழியர் பழனிசாமியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
 | 

மார்டின் நிறுவன ஊழியரின் உடல் இன்று மறுபரிசோதனை!

உயர்நீதிமன்ற உத்தரவின் படி மார்டின் நிறுவன ஊழியர் பழனிசாமியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

மார்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழசாமி கடந்த மே 3ஆம் தேதி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மறு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

கோரிக்கையை ஏற்றுகொண்ட உயர்நீதிமன்றம் மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று மீண்டும் பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு மருத்துவர் சம்பத்குமார் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் என மூன்று பேர் கொண்ட குழு இந்த மறு பிரேத பரிசோதனை செய்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP