மணப்பாறை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு!

மணப்பாறை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீசியவரை கைது செய்திடக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 | 

மணப்பாறை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு!

மணப்பாறை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீசியவரை கைது செய்திடக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் கடந்த 2 ம் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைக்கப்பட்ட சிலைகளில் 20 சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக 20 சிலைகளும் புத்தாநத்தம் காளியம்மன் கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டு தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தாரை தப்பட்டத்துடன் இளைஞர்கள் நடனமாட, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் புத்தாநத்தம் கடைவீதியை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு கல் வந்து விழுந்தது. இதனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் ஊர்வலம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர் இந்து முன்னணியினர் மற்றும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கல் வீசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் திருச்சி சரக டி.ஜ.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி. ஜியாவுல் ஹக் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு ஊர்வலம் மீண்டும் தொடங்கியது. 

நிறைவாக இடையபட்டியைச் சென்றடைந்ததும் அங்குள்ள விநாயகர் குளத்தில் விநாயகர் சிலைகள் அனைத்தும் தண்ணீரில் கரைக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்திற்காக 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP