மதுரை மைய மண்டபம் வந்தடைந்தது வைகை !

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக மதுரை வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மதுரை மைய மண்டபம் வந்தடைந்தது. மேலும், நாளை காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது.
 | 

மதுரை மைய மண்டபம் வந்தடைந்தது வைகை !

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக மதுரை வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மதுரை மைய மண்டபம் வந்தடைந்தது.

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மதுரை மாசி வீதிகளில் திரு தேரோட்ட நிகழ்வு நடைபெற்று முடிந்ததையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக, மதுரை வைகை அணையில் இருந்து 216  மில்லியன் கன அடி நீர் நேற்றைய முன்தினம் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டபத்திற்கு வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்தடைந்தது. மேலும், நாளை காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP