சென்னை - காகித குடோனில் தீ விபத்து

சென்னை கொருக்குப்பேட்டையில், காகித குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. இங்குள்ள பள்ளி தீயணைப்பு துறையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்ததுள்ளது.
 | 

சென்னை - காகித குடோனில் தீ விபத்து

சென்னை கொருக்குப்பேட்டையில், காகித குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. 

சென்னை கொருக்குப்பேட்டை தியாகப்ப செட்டி தெருவில் புஷ்பராஜ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான அரசு உதவி பெறும் ஆர். ஜெ.ஆர் பள்ளியும், அருகில் தனியார் காகித குடோனும் அமைந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடித்து இன்று காலை மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்த நேரத்தில், அருகில் இருந்த காகித குடோனில் இருந்து புகை கசிந்ததுள்ளது. இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு விடுமுறை அளித்ததோடு இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும், குடோன் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சென்னை - காகித குடோனில் தீ விபத்து

இதனை தொடர்ந்து தகவலறிந்து கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடோனின் பக்கவாட்டு பகுதியில் துளை போட்டும், ஷட்டர் கதவை உடைத்தும் தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரிண்டிங் இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணம் குறித்து கொருக்குப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இயங்கும் பள்ளி தீயணைப்பு துறையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்ததும் இந்த விபத்து மூலமாக தெரியவந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP