கும்பகோணம்: பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம் - போலீஸ் விசாரணை

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே மூன்று பள்ளிமாணவர்கள் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

கும்பகோணம்: பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம் - போலீஸ் விசாரணை

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே மூன்று பள்ளிமாணவர்கள் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள பவுன்ட்ரி கப்பூரம்  ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்.  இவரது மகன் மனோஜ்(13) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகன்  மகேந்திரன் (8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த  21ஆம் தேதி முதல் இவர்கள் இருவரும் வீட்டிற்கு வரவில்லை என்பதால் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால், மாணவர்கள் கிடைக்கவில்லை.

இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் (11)  என்ற மாணவனும் அன்று முதல் மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவர்களை தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று மாணவர்கள் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP