கும்பகோணம்: பிளாஸ்டிக், புகையிலை விழிப்புணர்வு மினி மாரத்தான்

கும்பகோணம் நாச்சியார் கோவிலில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெரியோர்கள் பங்கேற்றனர்.
 | 

கும்பகோணம் நாச்சியார் கோவிலில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாச்சியார்கோவில் லேம் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஃபயர் பிரண்ட்ஸ் சார்பில் மின மாரத்தான் போட்டி நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை திருவிடைமருதூர்  காவல்துறை துணை கண்காணிப்பாளர்  அசோகன் மற்றும்  நாச்சியார்கோவில் காவல்துறை ஆய்வாளர் ரேகாராணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைக்கு  ரொக்க பரிசும்  நாச்சியார்கோவில் குத்துவிளக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் ராஜா, பொறுப்பாளர்கள் சீனிவாசன்,  செந்தில்குமார், உமாசங்கர், ஆசிரியர் சுந்தர்ராஜன்  மற்றும் விக்னேஷ் ஜானகிராமன், சர்னேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நாச்சியார் கோயில் காவல்துறை ஆய்வாளர் ரேகாராணி பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பற்றிய  விழிப்புணர்வு பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்தார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP