கும்பகோணம்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது தனியார் விடுதி ஒன்றில் ரூபாய் 3 லட்சம் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

கும்பகோணம்:  சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

கும்பகோணத்தில்  உள்ள தனியார் விடுதியில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  

இதனையடுத்து தகவலின் பேரில் அங்குள்ள தனியார் விடுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் விடுதி ஒன்றில் ரூபாய் 3 லட்சம் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள காவல் துறையினர் 7 பேரிடம் இருந்த 3 லட்சம் பணத்தை  பறிமுதல் செய்து,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP