குடிசை வீட்டில் தீ விபத்து: தாய், மகள் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

குடிசை வீட்டில் தீ விபத்து: தாய், மகள் பலி

சத்தியமங்கலம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மல்லன் குழியில் வசித்து வந்தவர் ராஜம்மாள். இவர் நேற்று தனது மகள் கீதாவுடன் தனது குடிசை வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது, திடிரென வீடு தீப்பிடித்தது. இதில் தூங்கி கொண்டிருந்த இருவரும் வெளியே வரமுடியாமல் வீட்டினுள் சிக்கி கொண்டனர். 

மளமளவென தீ வீடு முழுவதும் பரவியதில் தாய் ராஜம்மாள் மற்றும் மகள் கீதா ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா?  அல்லது கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP