காவிரி கதவணைத் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டி டெல்டா மாவட்டங்களில் எதிர்காலத்தில் ஒரு போக சாகுபடிக்கு ஆபத்து ஏற்படுத்த உள்ள கதவணை திட்டத்தை கைவிடக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 | 

காவிரி கதவணைத் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டி டெல்டா மாவட்டங்களில் எதிர்காலத்தில் ஒரு போக சாகுபடிக்கு ஆபத்து ஏற்படுத்த  உள்ள கதவணை திட்டத்தை கைவிடக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் சென்ற ஆண்டு ஈரோட்டில் செய்தியாளர்களை சந்திப்பில் காவிரி சமவெளி பகுதியாக இருப்பதால் தடுப்பணைகள் கட்ட முடியாத நிலை என்று தெரிவித்தார்.  அவரது கருத்து தவறானது என்பதை எங்களது சங்கத்தினர் சுட்டிக் காட்டி கண்டனத்தை தெரிவித்து இருந்த நிலையில் நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில் காவிரி உபரிநீர் திட்டம் என்ற பெயரில் கரூரிற்கு மேற்கில் காவிரியில் ரூபாய் 495 கோடியில் புதிதாக கதவணை அமைத்திட திட்டத்தினை முதல்வர் அறிவித்துள்ளார்.

இது 14 மாவட்டங்களுக்கு 5.25 கோடி மக்களுக்கு குடிநீருக்கும், ஏற்கனவே கர்நாடகத்தின் நயவஞ்சக போக்கினால் தமிழகத்தின் காவிரி டெல்டாவிற்கு 205 டிஎம்சி இறுதி தீர்ப்பில் 177. 25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு போக சம்பா சாகுபடிக்கு 210 டிஎம்சி தேவை என்ற நிலையில் தமிழக முதல்வர் கரூர் கதவணை திட்டத்தினால் நிச்சயமாக எதிர்காலங்களில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மேலும் வறண்ட பாலைவனமாக குடிநீருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

காவிரி கதவணைத் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

கரூர் கதவணை திட்டத்தால் எதிர்காலத்தில் ஒரு மாநிலத்துக்குள்ளேயே விவசாயிகளிடையே இருந்தபோதும் விரோதப்போக்கு சண்டை சச்சரவுகள் விபரீத மோதல் ஏற்படும் நிலை வரும் என்பதை தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதால் ஏற்படும் நிரந்தர பாதிப்புகளினால் பாதிக்கப்படும் விவசாயிகள், சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகளின் கவனத்தை திசை திருப்புவதற்கவும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கும் சதித் திட்டம் தான் கரூர் தவணை திட்டம்.

அம்மாவின் ஆட்சி என்று பெருமை பேசும் தமிழக முதல்வர் 2013ம் ஆண்டு தேர்தல் பயணத்தில் காவிரி டெல்டாவில் கும்பகோணம் குடிதாங்கி அருகில் ரூபாய் 405 கோடியில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைத்து தருவதாக பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்த குடிதாங்கி கதவணை திட்டத்தினை உடனே செயல்படுத்த வேண்டும்.

கரூர் கதவணை திட்டத்தை கைவிடக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் வேப்பத்தூர் வரதராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விமலநாதன் மற்றும் 200க்கு மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டனம் முழக்கம் எழுப்பினார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP