குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து குறிப்பிட்டதேர்தல் அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள்: சத்யபிரதா சாஹூ

குக்கர் சின்னம் யாருக்கும் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து அந்தந்தப்பகுதி தேர்தல் அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 | 

குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து குறிப்பிட்டதேர்தல் அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள்: சத்யபிரதா சாஹூ

குக்கர் சின்னம் யாருக்கும் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சேலம் உட்பட சில மாவட்ட ஆட்சியரை மாற்றகோரி திமுக மனு அளித்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 54.43 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் அளித்ததன் அடிப்படையில் 19 கோடி பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

வாகனங்கள் மூலம் பணப்பட்டுவாடாவை தடுக்க, தேர்தலுக்கு பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பணப்பட்டுவாடா தொடர்பாக நேற்று மட்டும் 66 புகார்களும், இதுவரை 768 புகார்களும் வந்துள்ளதாக கூறிய அவர், இது தொடர்பாக 44 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

குக்கர் சின்னமானது சுயேட்சை வேட்பாளர்களின் பட்டியலில் தான் இடம்பெற்றிருப்பதாகவும், அதை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பது குறித்து அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்த அவர், இறுதி வேட்பாளர் பட்டியலில் அனைவரின் சின்னமும் சேர்த்து வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP