விடாமுயற்சியுடன் கடுமையான பயிற்சியே வெற்றிக்கு காரணம்: தங்கமங்கை கோமதி

விடாமுயற்சியுடன் கடுமையான பயிற்சி மேற்கொண்டதே தங்க பதக்கம் வெல்ல காரணம் என தடகள வீராங்கனை கோமதி தெரிவித்துள்ளார்.
 | 

விடாமுயற்சியுடன் கடுமையான பயிற்சியே வெற்றிக்கு காரணம்: தங்கமங்கை கோமதி

விடாமுயற்சியுடன் கடுமையான பயிற்சி மேற்கொண்டதே தங்க பதக்கம் வெல்ல காரணம் என தடகள வீராங்கனை கோமதி தெரிவித்துள்ளார்.

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு திருச்சியில் ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய கோமதி, தனது குடும் சூழ்நிலை காரணமாக தன்னால் பயிற்சியை தொடர முடியாமல் நான் பதியில் நிறுத்தி இருந்ததாகவும், பின்னர் சிறிது காலம் இடைவெளி விட்டு மீண்டும் பயிற்சிக்கு சென்ற போது என்னால் இதற்கு மேல் தொடர முடியாது என பலரும் கூறியதாக தெரிவித்தார்.

ஆனால் இதை பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன், கடுமையான பயிற்சி மேற்கொண்டு தற்போது தங்கம் வென்றுள்ளதாகவும் என்னால் முடியும் என்று எனக்கு தெரியும் எனவும் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் தங்க மங்கை கோமதிக்கு விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP