கோவை: ஆசீர்வதிப்பதாக கூறி ரூ.10 ஆயிரத்தை எடுத்து சென்ற திருநங்கைகள்!

கோவை, டாடாபாத் அருகே இளைஞர் ஒருவரை ஆசீர்வதிப்பதாக கூறி பாக்கெட்டில் இருந்த 10,500 ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கோவை: ஆசீர்வதிப்பதாக கூறி ரூ.10 ஆயிரத்தை எடுத்து சென்ற திருநங்கைகள்!

கோவை, டாடாபாத் அருகே இளைஞர் ஒருவரை ஆசீர்வதிப்பதாக கூறி பாக்கெட்டில் இருந்த 10,500 ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகேயுள்ள கதிரவன் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்கான் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு பணியின் நிமித்தம் டாடாபாத் ஒன்பதாவது வீதியில் உள்ள நிறுவனத்திற்கு  சென்று விட்டு வீடு திரும்புவதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது அங்கே வந்த மூன்று திருநங்கைகள் இம்ரான்கானிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து இம்ரான்கான் பத்து ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது, இம்ரான்கானை சுற்றி நின்ற திருநங்கைகள் அவரது தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பது போல ஏமாற்றி அவரது பாக்கெட்டுக்குள் கைவிட்டு, 10,500 ரூபாயை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இதையடுத்து இம்ரான் கான் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கோவையில் கடந்த சில நாட்களாகவே திருநங்கைகள் பணத்தை ஆசீர்வதித்து தருவதாக வழிப்பறியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP