கோவை: சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி!

கோவையில் மர்ம நபர்கள் சிலர் 2 ,இடங்களில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கோவை: சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி!

கோவையில் மர்ம நபர்கள் சிலர்  2 ,இடங்களில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் காந்திபுரம் ராம்நகர், சாய்பாபா காலனி குடியிருப்பு பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயன்றுள்ளனர். காந்திரபுரம் ராம்நகர் பகுதியில் சந்தன மரங்களை வெட்டுவதை கண்ட காவலர் அவர்களை தடுத்துள்ளார். அப்போது, அந்த மர்ம நபர்கள் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதேபோல் சாய்பாபா காலனியிலும் சந்தன மரத்தை வெட்ட முயற்சி நடந்துள்ளது. 

ஏற்கனவே 2 முறை சந்தன மரங்களை வெட்ட முயன்ற நிலையில், நேற்றைய தினம் மீண்டும் முயற்சி செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP