சந்திராயன் இரண்டு விண்கலம் வெற்றி பெற பிரார்த்தனை செய்த பள்ளி மாணவ மாணவிகள் !

அம்மாச்சத்திரம் தனியார் மெட்ரிக் பள்ளியில் 100 அடி நீளம் உள்ள சந்திராயன் விண்கலத்தின் உருவ படத்திற்கு முன்னாள் தேசியக் கொடியுடன் இலக்கை நோக்கி விரைவில் வெற்றி பெற வேண்டி மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் சந்திராயன் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தும் மாணவ மாணவிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்
 | 

கும்பகோணத்தில் அம்மாச்சத்திரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் கடந்த 2017ம் ஆண்டு சந்திராயன் விண்கலம் கட்டுமான பணிகளின் போதே நேரில் சென்று பார்த்து வந்தனர்.  இந்த நிலையில்  நேற்று இரவு குறிப்பிட்ட இலக்கை விண்கலம் அடையும் என்று இரவு முழுவதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தொலைக்காட்சி முன்பு காத்திருந்தனர்.

 இந்நிலையில் சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் கால் பதிக்க முடியாமல் போனது. இருந்த போதிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதால் குறிப்பிட்ட இலக்கை  சந்திராயன் விண்கலம் விரைவில் அடைய வேண்டும் என இந்த பள்ளியில் 100 அடி நீளம் கொண்ட சந்திராயன் விண்கலத்தின் உருவ படத்திற்கு முன்னாள் கையில் தேசிய கொடியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும் வெற்றி பெற பிரார்த்தனைகளையும் செய்தனர் இந்த நிகழ்ச்சி காண்பவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP