கோடி, கோடியாக பணம் பறிமுதலா? : மார்ட்டின் நிறுவனம் மறுப்பு

வருமான வரித்துறை சோதனையில் கோடி, கோடியாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மார்ட்டின் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 | 

கோடி, கோடியாக பணம் பறிமுதலா? : மார்ட்டின் நிறுவனம் மறுப்பு

தங்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் கோடி, கோடியாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, வெளியான தகவல்களை மார்ட்டின் நிறுவனம் மறுத்துள்ளது. 

இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

நாடு முழுவதும் உள்ள எங்கள் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கடந்த 3-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 3-ம் தேதி முதல் 4-ம் தேதி இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.

அதில், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள எங்களது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.98,820 ஆகும். இதற்கான சட்டப்பூர்வ கைப்பற்றுதல் படிவமானது, வருமான வரித்துறையின் உதவி இயக்குநரால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், 2 நாட்கள் கோவையில் உள்ள எங்களது வீட்டினுள் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டதாகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தவறான செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த காணொளியின் புகைப்படங்கள் சில செய்தித் தாள்களிலும் வெளியாகியுள்ளன. அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP