மணப்பாறை:அண்ணன் மகன் திருமணத்தின் போது உயிரிழந்த அத்தை!

மணப்பாறை அருகே 6 பேர் பயணித்த ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதியதில் கண்ணம்மாள் என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
 | 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் வயது 55. இவரது அண்ணன் மகன் திருமணம் இன்று நடைபெறும் நிலையில் மண்டபத்தில் இருந்து அதற்கான பணிகளை செய்து விட்டு இன்று காலை வீட்டிற்கு சென்று குளித்து விட்டு வருவதற்காக கண்ணம்மாள் உள்பட 6 பேர் ஒரு பயணிகள் ஆட்டோவில் செவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு  என்ற இடத்தில் ஆட்டோ சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஆட்டோ மீது மோதியது.

மணப்பாறை:அண்ணன் மகன் திருமணத்தின் போது உயிரிழந்த அத்தை!

இதில்   ஆட்டோ ஓட்டுனர் பாட்ஷா  உட்பட ஆட்டோவில் பயணம் செய்த 6 பேரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் கண்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டுனர் பாட்ஷா உள்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் மகன் திருமணம் நடைபெற உள்ள நிலையில் கண்ணம்மாள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP