ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்ட கூட்டணி: முதலமைச்சர்

ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்டது அதிமுக கூட்டணி எனவும், திமுக கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் முதலமைச்சர் பழனிச்சமி தெரிவித்துள்ளார்.
 | 

ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்ட கூட்டணி: முதலமைச்சர்

அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்டது என முதலமைச்சர் பழனிச்சமி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி  நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அம்மாவின் அரசு மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்ட கூட்டணி இது என குறிப்பிட்டார். 

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக ஒரு கட்சி அல்ல, பூமியில் இருந்து அகற்ற வேண்டும் என விமர்சனம் செய்துவிட்டு தற்போது திமுகவுடனே கூட்டணி அமைத்துள்ளார். இது தான் சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக அரசு நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி அமைந்தால் தான் திட்டங்கள் நிறைவேற்ற முடியும். அதற்கு மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். இந்த நாடு ஜனநாயக நாடு 130 கோடி மக்கள் இருக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் இரண்டையும் யார் பாதுகாக்கின்றனரோ அவர்கள் தான் பிரதமராக வர வேண்டும் அந்த தகுதி திறமை பிரதமர் மோடியிடம் உள்ளது என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP