அனைத்து கோரிக்கைகளும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்: பாமக வேட்பாளர்

பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பால் தெரிவித்துள்ளார்.
 | 

அனைத்து கோரிக்கைகளும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்: பாமக வேட்பாளர்

பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெற்ற 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் தெரிவித்துள்ளார். 

மத்திய சென்னையில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பால் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயோத்திகுப்பம், நடுக்குப்பம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நடைபயணமாக பிரசாரத்தை மேற்கொண்ட சாம்பால் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர், இன்று நடைபயணமாக தொடங்கியுள்ள இந்த பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் பல்வேறு குறைகளை கேட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என குறிப்பிட்ட அவர், இவர்களது அனைத்து கோரிக்கைகளையும் வெற்றி பெற்றவுடன் மூன்று அல்லது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றித் தருவதாகவும், குறிப்பாக குடிநீர் வசதி, சாக்கடை வசதிகளை ஏற்படுத்தி அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP