பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி!

பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, இனி எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பேனர் வைக்க மாட்டோம் என்று அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து எடுத்துள்ளனர். இது தொடர்பான சுவரொட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
 | 

மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் வெளியிட்டிருக்கும் சுவரொட்டிகளில், 'சாலைகளில் இருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற சகோதரியின் இழப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவிக்கின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படவும். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த சுவரொட்டிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP