விவசாயக் கடன் விவகாரம்: அமைச்சருக்கு அய்யாக்கண்ணு கண்டனம்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்து இருப்பதற்கு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 | 

விவசாயக் கடன் விவகாரம்: அமைச்சருக்கு அய்யாக்கண்ணு கண்டனம்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளதற்கு, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட போதிலும், வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை. 

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையாவது தமிழக அரசு தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என , கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக உள்ளது" என்றார் அய்யாக்கண்ணு.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP