கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை!

சேலத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 1720 பேர் தேர்வெழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை.
 | 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கைரேகை நிபுணர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. அந்த வகையில் சேலத்தில் இன்று 3 தேர்வு மையங்களில் 6 தேர்வு கூடங்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் என  எழுத்து தேர்வுகள் நடைபெறுகிறது. 

இந்த தேர்வில் 1720 பேர் தேர்வெழுத அனுமதியளித்திருந்த நிலையில் 1254 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 466 பேர் தேர்வு எழுத வரவில்லை தேர்வணையம் தெரிவித்துள்ளனர்.  தேர்வுகள் நடைபெற்ற தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
 
மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதொடு தேர்வர்கள் யாரும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க அரசு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வீடியோ பதிவு மூலம் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டது.

newstmin

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP