Logo

திருச்சி சிறையில் 20 வெளிநாட்டு கைதிகள் தற்கொலை முயற்சி!

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் வெளிநாட்டு கைதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

திருச்சி சிறையில் 20 வெளிநாட்டு கைதிகள் தற்கொலை முயற்சி!

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் வெளிநாட்டு கைதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பாஸ்போர்ட் இன்றி தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பல்கேரியா, ஜெர்மன், சைனா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 72 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் அவர்களை தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பவில்லை என கூறி நேற்று முதல் 46 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் நாளான இன்று அவர்களில் 20 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறப்பு துணை தாசில்தார் சுந்தரராஜன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களை சட்ட விரோதமாக கைது செய்து, சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்திருப்பதாக குற்றச்சாட்டுகின்றனர். மேலும் உடனடியாக தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP