காணாமல் போன மீனவர்களில் 2 பேர் உயிரிழப்பு!

மல்லிப்பட்டினம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மீனவர்கள் இரண்டு பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.
 | 

காணாமல் போன மீனவர்களில் 2 பேர் உயிரிழப்பு!

மல்லிப்பட்டினம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மீனவர்கள் இரண்டு பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.  

கடந்த 4ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் புதிய படகு வாங்கிவிட்டு ஊர் திரும்பியபோது, மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 மீனவர்களும் தண்ணீரில் விழுத்தனர். இதில், செந்தில், காளீஸ்வரம் ஆகிய 2 பேர் மட்டும் உயிர் தப்பி கரைக்கு வந்து  மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் தேடும் பணியை துரிதப்படுத்தினர். இதில் 4 பேர் கடந்த 5 ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இந்நிலையில், முத்துப்பேட்டை - கோடியக்கரை அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் உடல் கரை ஒதுங்கியுள்ளது. எஞ்சிய 2 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP