Logo

கோவையில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்: விமானநிலைய ஊழியர்கள் 2 பேர் கைது.!

இலங்கையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு கடத்தப்பட்ட 1.6 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு உதவிய கோவை விமான நிலைய ஊழியர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
 | 

கோவையில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்: விமானநிலைய ஊழியர்கள் 2 பேர் கைது.!

இலங்கையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு கடத்தப்பட்ட 1.6 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகவும், விமான நிலைய ஊழியர்கள் கடத்தலுக்கு உதவுவதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் படி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று கோவை விமான நிலைய ஊழியர்களிடன் விசாரணை நடத்தினர். ஊழியர்கள் இருவரின் உதவியுடன் தங்கம் கடத்தப்படுவதை உறுதி செய்த அதிகாரிகள், கடத்தல்காரர்களுக்கு சந்தேகம் வராதபடி நடந்து கொள்ளுமாறு விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

பின்னர் கொழும்புவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள், கடத்தல் தங்கத்தை விமான நிலைய ஊழியர்களிடம் கொடுக்கும் போது, கையும் களவுமாக கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ எடைக்கொண்ட 16 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.  

இது தொடர்பாக கோவை விமான நிலைய ஊழியர்கள் மனோஜ், சதீஷ், இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த பயணி சையது அபுதாஹிர்,  ராஜா மற்றும் ஓட்டுனர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த கடத்தலில் முக்கிய நபரான திருச்சி நிதி நிறுவனம் நடத்தி வரும் மிஜ்ரா என்பவரிடம் விசாரணை நடத்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP